ADDED : மே 18, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் ; கோவை மாவட்டம் காரமடையில் உள்ள ஆர்.வி. கலை, அறிவியல் கல்லூரியில் இன்று 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுத் தொடர்பான வழிகாட்டு கையேட்டினை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வழங்க உள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர்கள் மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் படிப்புகள் சார்ந்த விவரங்களையும், கல்வி கடன் சார்ந்த விவரங்களையும், விருப்பமான கல்லூரியையும், பாடப் பிரிவையும் தேர்ந்தெடுப்பது எவ்வாறு மற்றும் வேலை வாய்ப்பு குறித்த தகவல்களையும், போட்டி தேர்வு குறித்த விவரங்களையும் அளிக்க உள்ளனர்.--