/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி கோ-கோ போட்டி: பி.எஸ்.ஜி. அணி முதலிடம்
/
கல்லுாரி கோ-கோ போட்டி: பி.எஸ்.ஜி. அணி முதலிடம்
ADDED : அக் 30, 2025 12:14 AM

கோவை: கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட 'பி' மண்டலங்களுக்கு இடையே, கல்லுாரி மாணவர்களுக்கான கோ--கோ போட்டிகள் நடத்தப்பட்டன.
கல்லுாரி முதல்வர் மாலா, போட்டியை துவக்கி வைத்தார். மொத்தம் 11 அணிகள் பங்கேற்றன. முதல் நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன. பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி அணி முதலிடம், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி இரண்டாமிடம் பெற்றன.
ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லுாரி மூன்றாம் இடம், கதிர் கலை அறிவியல் கல்லுாரி நான்காம் இடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.
பல்கலை உடற்கல்வி இயக்குனர் அண்ணாதுரை, கல்லுாரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் ஊரணியான், மகேஸ்வரி உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.

