தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிறந்த மாணவர்களுக்கு கல்லுாரியில் கவுரவம்

சிறந்த மாணவர்களுக்கு கல்லுாரியில் கவுரவம்

சிறந்த மாணவர்களுக்கு கல்லுாரியில் கவுரவம்


ADDED : ஏப் 03, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 07:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. பாரதியார் பல்கலையின் பயோ மற்றும் இன்பர்மேஷன் துறைத்தலைவர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். 'பெஸ்ட் அவுட்கோயிங்' மாணவருக்கான தங்க பதக்கத்தை, பி.எஸ்சி., மூன்றாமாண்டு மாணவி விபின் வென்றார். வெள்ளி பதக்கத்தை மாணவி அபிநயா, வெண்கலப் பதக்கத்தினை மாணவன் செல்வன் பெற்றனர்.

கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் அரங்கேற்றினர். சின்னத்திரை நகைச்சுவை கலைஞர்கள் பாலா, வினோத் மாணவர்களை உற்சாகப்படுத்தினர். விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகள், வீரர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

எஸ்.என்.எஸ்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜலட்சுமி, செயலர் நளின், முதல்வர் அனிதா, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us