/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கதிர் கல்லுாரியில் கல்லுாரி சந்தை
/
கதிர் கல்லுாரியில் கல்லுாரி சந்தை
ADDED : செப் 25, 2025 12:40 AM

கோவை: கதிர் பொறியியல் கல்லுாரியின் மேலாண்மை துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து, இரண்டு நாள் கல்லுாரி சந்தை நிகழ்வை நடத்தியது.
சிறப்பு விருந்தினராக கலெக்டர் பவன்குமார் பங்கேற்று, துவக்கி வைத்தார். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உட்பட பல மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்கள், தொழில் முனைவோர் பங்கேற்று, தங்கள் பொருட்களை விற்றனர்
மேலாண்மை துறை மாணவர்கள் தலைமை பண்பு, நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் திறன், சந்தை இடுதல், விலை நிர்ணயத்தில், நுகர்வோர் தேவை அறிதல் போன்ற திறமைகளை வளர்க்க பெரும் வாய்ப்பாக அமைந்தது.
கூடுதல் கலெக்டர் சங்கத் பல்வந்த் வாகே, மகளிர் திட்ட இயக்குனர் மதுரா, கதிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் கதிர், செயலாளர் லாவண்யா, துணை தலைவர் மிதுலேஷ், துணை செயலாளர் பிரதிக் ஷா, கல்லுாரி முதல்வர் உதயகுமார், மேலாண்மை துறை இயக்குனர் குணசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.