ADDED : நவ 12, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லூரி மாணவர் தற்கொலை கோவை அருகே உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த மாணவர் தற்கொலை தொடர்பாக பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
கோவை அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் முகம்மது ஷப்பிக்,18, கடந்த, 4ம் தேதி கல்லூரி மொட்டை மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில், மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து துடியலூர் போலீசில், நேற்று மாலை, தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெற்றோர் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர் தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

