/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவர் விபத்தில் மரணம்
/
கல்லுாரி மாணவர் விபத்தில் மரணம்
ADDED : பிப் 03, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்தவர் கைலாஷ், 18. தனியார் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர். நேற்று அதிகாலை 3:00 மணியளவில், கோவை டைடல் பார்க் ரோட்டில், அதிவேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த மின்கம்பம் மீது மோதியது. இதில் கைலாஷ் துாக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

