/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ.,வில் இணைந்த கல்லூரி மாணவர்கள்
/
பா.ஜ.,வில் இணைந்த கல்லூரி மாணவர்கள்
ADDED : பிப் 17, 2024 02:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்;பா.ஜ.,வில் புதிய உறுப்பினர்களை இணையும் நிகழ்ச்சி, வெள்ளிமலைபட்டினத்தில் நடந்தது. இவ்விழாவிற்கு, பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார்.
இந்த ஆண்டு, புதிய வாக்காளர்களாக உருவாகியுள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், 80க்கும் மேற்பட்டோர் பா.ஜ.,வில் இணைந்தனர். அவர்களுக்கு, தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன், உறுப்பினர் அட்டை வழங்கி, கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார். இதில், மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.