/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பகம் பல்கலை கபடி போட்டியில் கல்லுாரி மாணவர்கள் 'ஆக்ரோஷம்'
/
கற்பகம் பல்கலை கபடி போட்டியில் கல்லுாரி மாணவர்கள் 'ஆக்ரோஷம்'
கற்பகம் பல்கலை கபடி போட்டியில் கல்லுாரி மாணவர்கள் 'ஆக்ரோஷம்'
கற்பகம் பல்கலை கபடி போட்டியில் கல்லுாரி மாணவர்கள் 'ஆக்ரோஷம்'
ADDED : செப் 18, 2024 09:20 PM

கோவை: முதல்வர் கோப்பை கபடி, வாலிபால் போட்டிகளில், மாணவர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கற்பகம் பல்கலையில் முதல்வர் கோப்பைக்கான ஹேண்ட் பால், வாலிபால், கபடி போட்டிகள் நேற்று முதல் நடந்து வருகின்றன. இதில், கபடி போட்டியில் வீரர்கள் பிரிவில், 86 அணிகளும், வீராங்கனைகள் பிரிவில், 25 அணிகளும் பங்கேற்றுள்ளன.
வாலிபால் போட்டியில், வீரர்கள் பிரிவில், 90 அணிகளும், வீராங்கனைகள் பிரிவில், 30 அணிகளும், ஹேண்ட்பால் போட்டியில் வீரர்கள் பிரிவில், 28 அணிகளும், வீராங்கனைகள் பிரிவில், 7 அணிகளும் பங்கேற்றுள்ளன.
கபடி போட்டி வீரர்கள் பிரிவில், கற்பகம் பல்கலை அணி, 33-21 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு வேளாண் பல்கலை அணியை வென்றது.
ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி அணி, 26-13 என்ற புள்ளி கணக்கில் கே.கே.எஸ்., கல்லுாரியையும், பாரதியார் பல்கலை அணி, 29-17 என்ற புள்ளி கணக்கில் ஆர்.வி.எஸ்., கல்லுாரியையும், சி.எம்.எஸ்., கல்லுாரி அணி, 23-22 என்ற புள்ளி கணக்கில், ஸ்ரீ சக்தி கல்லுாரி அணியையும் வென்றது.
வாலிபால் போட்டி வீரர்கள் பிரிவில்,கற்பகம் பல்கலை அணி, 2-1 என்ற செட் கணக்கில் எஸ்.என்.எம்.வி., கல்லுாரி அணியையும், கே.பி.ஆர்., கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் ஆர்.வி.எஸ்., கல்லுாரி அணியையும் வென்றது. தொடர்ந்து, போட்டிகள் நடந்து வருகின்றன.