ADDED : அக் 01, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு, அவினாசிலிங்கம் பல்கலை சார்பில், ரத்ததான முகாம் நடந்தது.
ஆண்டுதோறும், அக்., 1ம் தேதி தேசிய தன்னார்வ ரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கோவை அவினாசிலிங்கம் பல்கலை நாட்டு நலப்பணித்திட்டம், ரெட் கிளப், யூத் ரெட் கிராஸ் மற்றும் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை சார்பில், ரத்த தான முகாம் நடந்தது. மாணவியர் பலர் ரத்ததானம் அளித்தனர்.