ADDED : ஏப் 08, 2026 07:18 PM

அ நிறம் | அளவு
கோவை: பச்சாப்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில் 24வது ஆண்டு விழா எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமையில் நடந்தது.
விழாவில் பேசிய போஷ் குளோபல் சாப்ட்வேர் டெக்னாலஜீஸின் தொழில்நுட்ப தலைவர் அருள் கிறிஸ்டோபர், ''எந்த துறையிலும் வெற்றி பெற தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு, தகவல் தொடர்பு ஆகிய மூன்றும் முக்கியம்,'' என்றார்.
நடப்பு கல்வியாண்டில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்லுாரியின் துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மதிப்புமிக்க சிறந்த பட்டதாரி மாணவர் விருது, நான்காமாண்டு ஐ.டி., துறை மாணவர் விஸ்வஜித், இ.சி.இ., மாணவி லக்சணாவுக்கு வழங்கப்பட்டது. முதல்வர் டேவிட் ரத்னராஜ், முன்னாள் மாணவி சுகன்யா, ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
