/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவு சார் நூலகத்தில் கல்லூரி மாணவிகள்
/
அறிவு சார் நூலகத்தில் கல்லூரி மாணவிகள்
ADDED : பிப் 13, 2024 11:01 PM

மேட்டுப்பாளையம்;அறிவு சார் மைய நூலகத்தில், கல்லூரி மாணவிகள் தேர்வுக்கான புத்தகங்களை படித்து பயன்பெற்றனர்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள வி.என்.கே மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம், ஓடந்துறை ஊராட்சியில் நடைபெற்று வருகிறது.
கல்லூரி முதல்வர் ரேவதி தலைமையில் முகாம் நடைபெறுகிறது. ஓடந்துறை ஊராட்சியில் சுற்றுப்புற தூய்மை செய்தல், ஊமப்பாளையம் பள்ளி வளாகத்தை தூய்மை செய்தல், கல்லாறு பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்துக்களை, அப்பகுதி மலைவாழ் மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் மணி நகரில் உள்ள நகராட்சி அறிவு சார் மைய நூலகத்திற்கு, நாட்டு நலப்பணி திட்ட கல்லூரி மாணவிகள், 100 பேர் வந்தனர். அங்கு போட்டி தேர்வுக்கான புத்தகங்களை எடுத்து படித்தனர்.
மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைக்குழு (குரூப் 4) போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், விரைவில் அறிவுசார் மையத்தில் நடைபெறுவது குறித்து சுகுமாரன் விளக்கி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட ஆய்வாளர் ராதிகா, உதவியாளர்கள் சத்திய பிரியா, அக்ஷயா, நகராட்சி பணியாளர்கள் ஜெயராமன், மாரிமுத்து, சுகன்யா, விக்னேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

