/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லூரி மாணவர்கள் என்.எஸ்.எஸ்., முகாம்
/
கல்லூரி மாணவர்கள் என்.எஸ்.எஸ்., முகாம்
ADDED : டிச 26, 2024 10:18 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ரத்தினம் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடக்கிறது.
கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில், நாட்டு நல பணி திட்ட முகாம், வரும், 31ம் தேதி வரை நடக்கிறது.
துவக்க விழாவில், கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம், முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் மாணிக்கம், ஊராட்சித் தலைவர் திருநாவுக்கரசு, நாட்டுநல பணித்திட்ட அலுவலர்கள் சவுமியா, சரவணகுமார், சித்ரா மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி வளாகம் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் வெள்ளையடித்தல் போன்ற பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். மேலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
பள்ளி வளாக தூய்மை பணி மற்றும் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, சிறப்புரை சொற்பொழிவு, தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 29ம் தேதி, மருத்துவ குணம் கொண்ட மூலிகை தோட்டம் அமைப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.