/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவர்கள் சமூகபணியில் ஈடுபடணும்!
/
கல்லுாரி மாணவர்கள் சமூகபணியில் ஈடுபடணும்!
ADDED : ஜன 23, 2025 11:33 PM

வால்பாறை;படிக்கும் வயதில் சமூக பணியாற்றும் வாய்பை மாணவர்கள் நழுவ விடக்கூடாது என, நாட்டு நலப்பணி திட்ட துவக்க விழாவில் தெரிவிக்கப்பட்டது.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், நேற்று துவங்கியது. வால்பாறை நகராட்சி சமுதாயக்கூடத்தில் நடந்த விழாவுக்கு கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் பெரியசாமி வரவேற்றார்.
விழாவில், வால்பாறை நகராட்சி கமிஷனர் ரகுராமன் கலந்து கொண்டு பேசும் போது, ''கல்லுாரி மாணவர்கள், படிப்பில் மட்டுமல்லாது பிற துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக, சமுதாயத்தின் வளர்ச்சிக்காக மாணவர்கள் சேவை செய்ய வேண்டும்.
சமூகப்பணிகளில் மாணவர்கள் அக்கறை கொண்டவர்களாக மாறவேண்டும். பொது இடங்களில் மாணவர்கள் சேவை மனப்பான்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ரூபா, உமாமகேஸ்வரி, சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

