/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி வாலிபால் வீரர் இந்திய அணிக்கு தேர்வு
/
கல்லுாரி வாலிபால் வீரர் இந்திய அணிக்கு தேர்வு
ADDED : ஜூன் 10, 2025 09:35 PM

பொள்ளாச்சி; தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தேர்வு, பெங்களூரு சாய் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அதில், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியின் வாலிபால் வீரர் அகிலன், 24 பேர் கொண்ட உத்தேச அணியில், தேர்வு பெற்றார்.
கடந்த ஒரு மாதமாக நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற, 12 பேர் கொண்ட இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். மத்திய ஆசிய வாலிபால் சங்கம் சார்பில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான வாலிபால் போட்டிகள் நேற்று துவங்கியது. வரும், 16ம் தேதி வரை போட்டிகள் நடக்கிறது. இதில், பங்கேற்கும் இந்திய அணியினர் கடந்த, 7ம் தேதி உஸ்பெகிஸ்தான் புறப்பட்டு சென்றனர். சாதனை மாணவரை, கல்லுாரி தலைவர் வெங்கடேஷ், துணைத்தலைவர் விஜயமோகன், செயலர் சேதுபதி, முதல்வர் வனிதாமணி, துணை முதல்வர் பாரதி ஆகியோர் பாராட்டினர்.