sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பாரதியார் பல்கலை கூடைப்பந்து காலிறுதியில் கலக்கிய கல்லுாரிகள்

/

 பாரதியார் பல்கலை கூடைப்பந்து காலிறுதியில் கலக்கிய கல்லுாரிகள்

 பாரதியார் பல்கலை கூடைப்பந்து காலிறுதியில் கலக்கிய கல்லுாரிகள்

 பாரதியார் பல்கலை கூடைப்பந்து காலிறுதியில் கலக்கிய கல்லுாரிகள்


ADDED : டிச 05, 2025 07:23 AM

Google News

ADDED : டிச 05, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் 3ம் தேதி துவங்கியது; இன்று முடிகிறது. இதில், 32 அணிகள் பங்கேற்றுள்ளன.

டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கல்லுாரி அணி, 68-37 என்ற புள்ளிகளில் இந்துஸ்தான் கல்லுாரி அணியையும், பாரதியார் பல்கலை அணி, 51-12 என்ற புள்ளிகளில் நேரு கலை அறிவியல் கல்லுாரி அணியையும் வென்றன.

பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் காலிறுதி போட்டியில், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி அணி, 68-12 என்ற புள்ளிகளில் கொங்கு கல்லுாரி அணியை வென்றது. இரண்டாம் போட்டியில், குமரகுரு லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அணி, 66-7 என்ற புள்ளிகளில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி அணியையும் வென்றது.

மூன்றாம் போட்டியில், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரி அணி, 73-56 என்ற புள்ளிகளில் டாக்டர் எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கல்லுாரி அணியையும், பாரதியார் பல்கலை அணி, 56-53 என்ற புள்ளிகளில் ரத்தினம் கல்லுாரி அணியையும் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன.






      Dinamalar
      Follow us