/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலர் பஞ்சு மிட்டாய்க்கு அனுமதியில்லை; வெள்ளைக்கு 'ஓகே' சொன்ன அதிகாரிகள் 'ரோடமைன் பி' நச்சு தடுக்க ஆயத்தம்

ADDED : பிப் 22, 2024 05:20 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள், கோவில் திருவிழாக்களின் போது 'ரோடமைன் பி' பஞ்சு மிட்டாய் விற்பனையைக் கண்டறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், சிறுவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில், 'ரோடமைன் பி' எனும் நச்சுப் பொருள் கலந்திருப்பது, உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனையில் தெரியவந்தது. அதனால், தமிழகத்தில், இளஞ்சிவப்பு நிற பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு, அரசு தடை விதித்தது.
இதனால், கோவை மாவட்டத்தில், மாவட்ட நியமன அலுவலர் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஆங்காங்கே ஆய்வு நடத்தி வருகின்றனர். பச்சை, ஊதா, பிங்க் நிறங்களை கொண்ட பஞ்சு மிட்டாய் விற்பனையைக் கண்டறிந்து தடுக்கின்றனர்.
அதேநேரம், வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள், கோவில் திருவிழாக்களின் போதும் இத்தகைய பஞ்சு மிட்டாய் விற்பனை அதிகரிக்கும் என்பதால் கண்டறிந்து தடுக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
உணவு பாதுகாப்பு துறையினர் கூறியதாவது:
பஞ்சுமிட்டாய்கள், குழந்தைகளையும் பெரியவர்களையும் கவரும் இனிப்பு தின்பண்டமாகும். இதில், 'ரோடமைன் பி' எனும் செயற்கை நிறமி கலப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில், கோவை மாவட்டத்தில், ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில், கோவில் திருவிழாக்கள் விமர்சையாக நடத்தப்படும்.
அப்போது, கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்படும். சிலர், பஞ்சு மிட்டாய் விற்பனையில் தீவிரம் காட்டுவர். அதனைக் கண்டறிந்து தடுக்க, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
இதேபோல, வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டு தலங்களிலும் இத்தகைய செயற்கை நிறமி பஞ்சு மிட்டாய் விற்பனையைக் கண்டறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். செயற்கை நிறமி கலக்காத வெண் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடையில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.