sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீதிக்குள்ளே வந்து பாருங்க; ஜனங்க கஷ்டம் தெரியும்! மத்திய மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆதங்கம்

/

வீதிக்குள்ளே வந்து பாருங்க; ஜனங்க கஷ்டம் தெரியும்! மத்திய மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆதங்கம்

வீதிக்குள்ளே வந்து பாருங்க; ஜனங்க கஷ்டம் தெரியும்! மத்திய மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆதங்கம்

வீதிக்குள்ளே வந்து பாருங்க; ஜனங்க கஷ்டம் தெரியும்! மத்திய மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆதங்கம்


ADDED : டிச 12, 2024 06:15 AM

Google News

ADDED : டிச 12, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம், மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:

பணிகள் குழு தலைவர் சாந்தி: சூயஸ் நிறுவனத்தினர் குழாய் பதிக்க தோண்டிய குழிகளை சரிவர மூடவில்லை; ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது. மத்திய மண்டலம், 20 வார்டுகளிலும் ரோடு படுமோசமாக உள்ளது.

வரி விதிப்பு குழு தலைவர் முபஷீரா: ரோடு, பாதாள சாக்கடை, தண்ணீர் வசதி செய்து கொடுப்பது மாநகராட்சி வேலை. பொதுமக்கள் வெறுத்துப்போய் விட்டனர்; அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

முனியம்மாள், 66வது வார்டு: ரெட் பீல்ட்ஸ் பகுதியில் வாகனங்களில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர். கை, கால் முறிந்தால், மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை என்னிடம் கேட்கின்றனர்.

வித்யா, 67வது வார்டு: வார்டு முழுவதும் ரோடு மோசமாக இருக்கிறது; எத்தனை அதிகாரிகளிடம் பேசுவது. நானே ரோடு ரோடாகச் செல்வதற்கு தயாராக இருக்கிறேன்.

ஷர்மிளா, 70வது வார்டு: பாதாள சாக்கடை அடைப்பு நீக்க, 'சூப்பர் சக்கர்' வாகனம் தருவிக்கப்பட்டது. ஒரே நாளில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டு விட்டது. கட்டடங்களை விஸ்தரிப்பு செய்து கட்டிய பின், பாதாள சாக்கடை குழாயை பெரிதுபடுத்தி விடுகின்றனர். மாநகராட்சிக்கு 'டிபாசிட்' செலுத்தாமல் இருப்பதால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

அலிமா பேகம், 84வது வார்டு: குப்பை அள்ள தொட்டி, தள்ளுவண்டி கொடுக்க வேண்டும். வார்டுகளில் உள்ள வீதிகளுக்குள் வந்து பாருங்கள்; மக்கள் படும் கஷ்டம் உங்களுக்குத் தெரியும்.

இவ்வாறு, கவுன்சிலர்கள் பேசினர்.

வழங்க முடியாது'

மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் பதிலளிக்கையில், ''சூயஸ் குழாய் பதிப்பு பிரச்னை அனைத்து பகுதிக்கும் பொதுவானது. எந்தெந்த ஏரியா என கவுன்சிலர்கள் லிஸ்ட் கொடுங்கள். சனிக்கிழமைக்குள் ரோட்டை சீரமைக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும். தேவைப்படும் இடங்களில் மாநகராட்சியால் பணிகளை செய்து விட்டு, அதற்குரிய தொகையை அபராதமாக விதிக்கலாம். 'டிரோன் சர்வே' மூலம் வரி சீராய்வு செய்வதில், 10 சதவீதம் மட்டுமே தவறாக இருக்கிறது; நேரில் முறையிட்டால், ஆய்வு செய்து, சரி செய்யப்படும். விண்ணப்பதாரரிடம் மட்டுமே வரி புத்தகம் வழங்கப்படும்; மூன்றாவது நபர்களிடம் வழங்க வாய்ப்பில்லை,'' என்றார்.



சிகிச்சையில் ஊழல்'

மண்டல தலைவர் மீனா பேசியதாவது: தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய, 1,650 ரூபாய் மாநகராட்சி கொடுக்கிறது. இதில், ஊழல் நடக்கிறது. எத்தனை நாய்களை பிடித்தனர்; எத்தனை நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்தனர் என்கிற கணக்கு இல்லை. 'டிரோன் சர்வே' மூலம் வரி சீரமைப்பு செய்வதில், தொகை வித்தியாசம் வருகிறது. இதுநாள் வரை, 140 ரூபாய் வரி செலுத்தியவருக்கு, 18 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. 650 ரூபாய் செலுத்தியவருக்கு, 27 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்களிடம் வரி புத்தகத்தை வழங்க வேண்டும்; தபாலில் மட்டுமே அனுப்புவோம் என கூறக்கூடாது. பொதுமக்களை அலைக்கழிக்காதீர். மாநகராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் மரியாதை கொடுத்து பேசுங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us