/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரட்டும்... வரட்டும்! போத்தனுார் வரை தனியார் பஸ்.. உக்கடத்துடன் நிற்பதால் சங்கடம்
/
வரட்டும்... வரட்டும்! போத்தனுார் வரை தனியார் பஸ்.. உக்கடத்துடன் நிற்பதால் சங்கடம்
வரட்டும்... வரட்டும்! போத்தனுார் வரை தனியார் பஸ்.. உக்கடத்துடன் நிற்பதால் சங்கடம்
வரட்டும்... வரட்டும்! போத்தனுார் வரை தனியார் பஸ்.. உக்கடத்துடன் நிற்பதால் சங்கடம்
ADDED : அக் 28, 2024 06:10 AM

போத்தனுார் : போத்தனூர் முதல் சிந்தாமணிபுதூர் வரை, இயக்கப்படும் தனியார் பஸ், முறையாக இயக்கப்படாததால், மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கோவை, போத்தனூரிலிருந்து ஆத்துப்பாலம், உக்கடம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் வழியாக சிந்தாமணிபுதூருக்கு, தனியார் நிறுவன பஸ் ஒன்று (தடம் எண்: 8ஏ) இயக்கப்படுகிறது.
இந்த பஸ் தினமும் காலை 8:00, 10:00 மதியம். 12:00, 2:00, மாலை. 4:20, 6:20 மற்றும் இரவு, 8:20 மணிக்கு, போத்தனூருக்கு வர வேண்டும்.
ஆனால் கடந்த பல மாதங்களாக, இப்பஸ் காலை 8:00 மணிக்கு மட்டுமே போத்தனூர் வருகிறது. பின் உக்கடம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
இதனால் இப்பஸ்சிற்காக காத்திருப்போர் ஏமாற்றமடைகின்றனர். இந்த பஸ், முன்புபோல் இயக்கப்படவேண்டும் என, மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
போத்தனூர் ரயில் பயனாளர்கள் சங்க பொது செயலாளர் சுப்ரமணி கூறுகையில், போத்தனூருக்கு வரவேண்டிய பல பஸ்கள், கடந்த சில ஆண்டுகளாக இங்கு வருவதில்லை. அதில் 8 ஏ பஸ்சும் ஒன்று. இப்பஸ், உக்கடம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
இன்று (நேற்று) இப்பஸ்சை உக்கடத்தில் பார்த்தேன். டிரைவர், கண்டக்டரிடம் முறைப்படி இயக்காவிடில், கலெக்டரிடம் புகார் தரப்படும் என கூறியுள்ளேன். பஸ் நிறுவன மேலாளரிடம் கூறியதற்கு, கண்டிப்பாக போத்தனூர் வரை பஸ் இயக்கப்படும் என உறுதியளித்துள்ளார்,'' என்றார்.
தனியார் பஸ் நிறுவன மேலாளர் மூர்த்தியிடம் கேட்டபோது, வாகன போக்குவரத்து அதிகரித்து விட்டது. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன், போத்தனூரிலிருந்து சிந்தாமணிபுதூர் செல்ல ஒதுக்கப்பட்ட ஒரு மணி நேரம்தான், இன்றும் நடைமுறையில் உள்ளது.
சில நேரங்களில் ஒரு கி. மீ.,தூரத்தை கடக்கவே, 20 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால்தான் பஸ்சை, போத்தனூர் வரை இயக்க முடிவதில்லை. இனி குறைந்தது, தினமும் மூன்று முறை போத்தனூருக்கு இயக்கவேண்டும் என டிரைவர், கண்டக்டரிடம் அறிவுறுத்தியுள்ளேன், என்றார்.
மக்களுக்கு மகிழ்ச்சி தரும் இந்த முடிவு, நடைமுறைக்கு வந்தால் நல்லது!

