/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!
/
சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!
ADDED : ஆக 16, 2025 09:15 PM

''நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதில்லை,'' என்று சிரித்தபடி கூறுகிறார், என்றார் நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து.
இன்று காமெடி ேஷாக்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது எதனால்? எப்போதும் இல்லாத அளவுக்கு, இன்றைக்கு மக்களிடம் மன அழுத்தமும், மன உளைச்சலும் அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணம் வாழ்க்கையின் தேவை அதிகமாகி இருக்கிறது.
மக்களின் வருமானம் குறைந்துள்ளது. அவரவர் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால், அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கிறது. இதற்கு இடையில், ஒருவர் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பு குறைவு.
கோவையில் நகைச்சுவை சங்கம் இருப்பது போல், எல்லா ஊர்களிலும் இருக்க வேண்டும்.
மனிதர்களுக்கு எவ்வளவு கஷ்டம், கவலை இருந்தலும், ஐந்து நிமிடம் மனம் விட்டு சிரித்தால் போதும், மனது நிம்மதியாகிவிடும்.
சிரிப்பு இல்லாத முகமும், உயிர் இல்லாத முகமும் ஒன்று என்பார்கள். அதனால் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சினிமாவில் நடிப்பது பற்றி?
நானும் சில படங்களில் நடித்து இருக்கிறேன். இன்றைக்கு வரும் சினிமாக்களில் வரும் ஜோக்ஸ் பார்த்து சிரிக்க முடியவில்லை. டி.வி., நிகழ்ச்சியை பார்த்தால் அதில் சீரியல்தான் அதிகம் ஓடுது. அதை பார்த்தால் அழத்தான் முடியும்; சிரிக்க முடியாது. டி.வி., காமெடி ஷோக்கள் ஓரளவுக்கு மக்கள் ரிலாக்ஸாக இருக்க உதவுகிறது.
மக்களை சிரிக்க வைக்க என்ன ஹோம் ஒர்க் செய்கிறீர்கள்? நான் டி.வி., நிகழ்ச்சிகளுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. 'அசத்த போவது யாரு' நிகழ்ச்சியில் 200 வாரம், கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் 40 வாரம் காமெடி ஷோ பண்ணி இருக்கிறேன்.
ஆனாலும், மக்களை சிரிக்க வைக்க, பல மணி நேரம் யோசிக்க வேண்டும். புத்தகங்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் புதுசாக நகைச்சுவை செய்ய முடியும். இல்லை என்றால் மக்கள் டி.வி., சேனலை மாற்றிவிடுவார்கள். நம்மையும் மறந்து விடுவார்கள்.
எப்போதும் சிரித்தபடி இருக்கும் காமெடி நடிகர்கள், சொந்த வாழ்க்கையில் எப்படி?
நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அவர்களின் வாழ்க்கையில் பல சோகம் மறைந்து இருக்கிறது. என் ஜோக்கை பார்த்து மக்கள் சிரித்தால், அது எனக்கு மகிழ்ச்சி.
எதிர்கால திட்டம் ஏதாவது?
நான் டி.வி., நிகழ்ச்சிகளில் ஐந்து நிமிடம் பேசுவேன். மக்கள் அதை பார்த்து ரசிப்பார்கள். ஆனால் கோவையில், இரண்டு மணி நேரம் பேசி இருக்கிறேன். இரண்டு மணி நேரமும் மக்கள் இடைவிடாமல் சிரித்து கொண்டே இருந்தனர்.
தொடர்ந்து 8 மணி நேரம் நகைச்சுவையாக பேசி, உலக சாதனை படைக்க முடிவு செய்து இருக்கிறேன். அதே போல் 10 மணி நேரம் தொடர்ச்சியாக பட்டிமன்றம் பேசி சாதனை செய்ய இருக்கிறேன்.
சிரிப்பு இல்லாத முகமும், உயிர் இல்லாத முகமும் ஒன்று என்பார்கள். அதனால் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.