/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆயுதப்படை போலீசாருக்கு கமாண்டோ பயிற்சி
/
ஆயுதப்படை போலீசாருக்கு கமாண்டோ பயிற்சி
ADDED : மே 22, 2025 11:34 PM
கோவை, : கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் உள்ள 183 இரண்டாம் நிலை போலீசாருக்கான ஆயுதப்படை பயிற்சி கடந்தாண்டு, டிச., 4ம் தேதி துவங்கியது. அவர்களுக்கு ஏழு மாதங்கள் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடந்த 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் போலீசாருக்கு எஸ்.டி.எப்., பயிற்சியாளர்கள் தலைமையில் ஆயுத பயிற்சி, தற்காப்பு பயிற்சி, உளவுத்தகவல் சேகரிப்பு, ஸ்னைப்பர் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 183 போலீசாருக்கான கமாண்டோ பயிற்சி முகாம் நேற்று துவங்கி நாளை வரை நடக்கிறது. சென்னை கமாண்டோ தலைமை அலுவலகத்தை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் நான்கு பேர், துப்பாக்கியை கையாளும் முறை உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கின்றனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை முதல்வர் குணசேகரன், துணை முதல்வர் பழனிகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.