/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
/
சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : பிப் 24, 2026 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: 450 மாணவ, மாணவியர் தொடர்ந்து ஒரு மணி நேரம் 10 நிமிடம் யோகா, கராத்தே பயிற்சி மற்றும் சிலம்பம் சுற்றி சாதித்தனர்.
சூலுார் அடுத்த பாப்பம்பட்டி வளர்மதி மெட்ரிக் பள்ளியில், சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளியில் பயிலும், 450 மாணவ, மாணவியர், தொடர்ந்து ஒரு மணி நேரம் 10 நிமிடம் யோகாசனங்கள், கராத்தே செய்தும், பரதம் ஆடியும், சிலம்பம் சுற்றியும் சாதனை படைத்தனர். வேங்கை சிலம்பொலி தமிழ் கலைக்கூடம் ஞானசேகரன், மனோஜ்குமார் ஆகியோர், சான்றிதழ் மற்றும் கோப்பையை, பள்ளி தாளாளர் வைத்தியநாதன், பள்ளி இயக்குனர் ஜெய்கணேஷ், முதல்வர் வனிதாவிடம் வழங்கினர்.
மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

