ADDED : ஜூன் 06, 2026 03:46 AM

அ நிறம் | அளவு
கோவை: 2025-26ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில் 52 அரசுப்பள்ளிகள், 21 அரசு உதவி பெறும் பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. இந்தப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை, கலெக்டர் பவன்குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.
விழாவில், 73 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் சால்வை போர்த்தி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ் 1 சேர்வதை உறுதி செய்ய வேண்டும். பிளஸ் 1 சேராதோர் ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளிலாவது சேர்வதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
உதவி கலெக்டர் (பயிற்சி) துஷார் சிங், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி, மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர்.
