/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் கிடந்த 1.8 கிலோ வெள்ளி போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
/
சாலையில் கிடந்த 1.8 கிலோ வெள்ளி போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
சாலையில் கிடந்த 1.8 கிலோ வெள்ளி போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
சாலையில் கிடந்த 1.8 கிலோ வெள்ளி போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 29, 2025 12:29 AM
கோவை : சாலையில் கிடந்த 1.849 கிலோ வெள்ளி நகைகளை, போலீசாரிடம் ஒப்படைத்தவரை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
வேடப்பட்டி, பெருமாள் நாயுடு லே அவுட்டை சேர்ந்த காளிராஜ் என்பவர் லட்சுமி மில்ஸ் சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது, கேட்பாரற்று ஒரு பேக் கிடந்தது. அதை எடுத்து பார்த்த போது, வெள்ளி ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் இருந்துள்ளது. அந்த நகைகளை அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரித்து, வெள்ளி பொருட்களை உரிமையாளரிடம் கொடுத்தனர். சாலையில் கிடந்த, வெள்ளி நகைகளை நேர்மையாக போலீசில் ஒப்படைத்த காளிராஜை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நேரில் அழைத்து, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.