/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேட்காமல் வாகன காப்பீடு பிடிப்பதா இழப்பீடு வழங்க ஆணையம் 'ஆர்டர்'
/
கேட்காமல் வாகன காப்பீடு பிடிப்பதா இழப்பீடு வழங்க ஆணையம் 'ஆர்டர்'
கேட்காமல் வாகன காப்பீடு பிடிப்பதா இழப்பீடு வழங்க ஆணையம் 'ஆர்டர்'
கேட்காமல் வாகன காப்பீடு பிடிப்பதா இழப்பீடு வழங்க ஆணையம் 'ஆர்டர்'
ADDED : ஜன 24, 2024 01:42 AM
கோவை;வாடிக்கையாளரிடம் கேட்காமல், வாகன காப்பீடு தொகை பிடித்தம் செய்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
கணபதி, லட்சுமி புரத்தை சேர்ந்த சண்முகம் என்பவர், திருச்சி ரோட்டிலுள்ள புல்மென் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தில், ராயல் என்பீல்டு பைக் வாங்குவதற்காக, 2019, ஏப்., 4ல், 23,791 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்தார்.
மீதி தொகை ரூ.1.25 லட்சத்திற்கு, மாத கடன் தவணையாக 3,767 ரூபாய் வீதம் 48 மாதத்தில் செலுத்த ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால், சண்முகம் மொபைல் போனுக்கு, மாதம் 3,927 ரூபாய் செலுத்த வேண்டும் என்று, குறுஞ்செய்தி வந்தது.
இது குறித்து புகார் அளித்தும், அவரது வங்கி கணக்கிலிருந்து கூடுதல் தவணை தொகை பிடித்தம் செய்யப்பட்டது.
இது குறித்து, பைக் விற்பனை நிறுவனத்திடம் கேட்ட போது, ஐந்து ஆண்டிற்கு வாகன காப்பீட்டிற்கு பிடித்தம் செய்த தொகையும், மாத தவணையுடன் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
வாடிக்கையாளரிடம் கேட்காமல், வாகன காப்பீடு தொகை பிடித்தம் செய்ததால், இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் புதிதாக வாங்கிய வாகனத்திற்கு காப்பீடு தொகை பிடித்தம் செய்து, எதிர் மனுதாரர் தன்னிச்சையாக முடிவு செய்தது, சேவை குறைபாடாகும்.
எனவே முறையற்ற வணிகத்திற்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு, உத்தரவில் தெரிவித்துள்ளார்.

