ADDED : ஜூன் 10, 2025 09:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில், அங்கன்வாடி மையம், மின்விளக்குகள், தார் சாலை, சுற்றுச்சுவர், வடிகால், மேல்நிலைத் தொட்டி, பல்நோக்கு மைய கட்டடம், வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
மேலும், ரேஷன் கடை, ஊராட்சி அலுவலகம், சந்தை உள்ளிட்ட, 90 வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜையும், 7 நிறைவடைந்த கட்டடங்களுக்கு திறப்பு விழாவும் நடந்தது.
இதில், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.