தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போதை விழிப்புணர்வு மாணவர்கள் உறுதியேற்பு

போதை விழிப்புணர்வு மாணவர்கள் உறுதியேற்பு

போதை விழிப்புணர்வு மாணவர்கள் உறுதியேற்பு


ADDED : பிப் 26, 2024 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி மற்றும் தனியார் கேன்சர் சென்டர் சார்பில், கேன்சர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், பேரணியை துவக்கி வைத்தார்.

கல்லுாரி முதல்வர் முத்துக்குமரன், டாக்டர்கள் மணிவண்ணன், ராஜாதாரங்கனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேரணியாக சென்ற மாணவர்கள், முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

'போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை அறிவேன். போதை பழக்கத்துக்கு ஆளாகமாட்டேன். குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து அறிவுரைகளை வழங்குவேன்.

போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் வாயிலாக, போதை பொருட்களை தமிழகத்தில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்,' என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us