தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விதிகளை கடைபிடித்து விபத்து தவிர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதியேற்பு

 விதிகளை கடைபிடித்து விபத்து தவிர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதியேற்பு

 விதிகளை கடைபிடித்து விபத்து தவிர்ப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதியேற்பு


ADDED : பிப் 02, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 05:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: 'போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விபத்துகளை தவிர்ப்போம்,' என, சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பொள்ளாச்சி கோட்டம், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி, சப் - கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது.

சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, பேரணியை துவக்கி வைத்தார். கோட்ட பொறியாளர் நித்தியானந்தன் முன்னிலை வகித்தார். சாலை பாதுகாப்பு அலகு உதவி கோட்ட பொறியாளர் சுப்புலட்சுமி, கோட்ட உதவி பொறியாளர்கள் மற்றும் முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சப் - கலெக்டர் அலுவலகம் முன் துவங்கிய பேரணியில், ஏ.ஆர்.பி. பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். காந்தி சிலை, தாலுகா அலுவலக ரோடு என முக்கிய வீதிகள் வழியாக சென்று, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பழநி செல்லும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக, ஒளிரும் ஒளிபட்டை ஒட்டி அனுப்பினர்.

அதிகாரிகள் கூறியதாவது: சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என, வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பாதுகாப்பான வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும்.

போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு முதலில் வழி விட வேண்டும்.

மருத்துவமனை, பள்ளி அருகே வாகனத்தை கவனமாக இயக்க வேண்டும். இரவில் எதிரில் வாகனம் வரும் போது, ஒளியை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us