தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மக்களின் கோரிக்கை நிறைவேற்ற உறுதி

 மக்களின் கோரிக்கை நிறைவேற்ற உறுதி

 மக்களின் கோரிக்கை நிறைவேற்ற உறுதி


ADDED : ஏப் 19, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: 'கடந்த 10 ஆண்டு ஆட்சியில் அவிநாசி தொகுதிக்கு எந்த பயனும் இல்லை' என, தி.மு.க., வேட்பாளர் கோகிலாமணி பேசினார்.

அவிநாசி தொகுதி தி.மு.க., வேட்பாளர் கோகிலாமணி, அன்னுார் பேரூராட்சி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு பேசுகையில், ''கடந்த 10 ஆண்டுகளில், அவிநாசி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தொகுதிக்குள் எட்டிப் பார்க்கவில்லை. இந்த காலகட்டத்தில், அவிநாசி தொகுதிக்கு எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. நான் உங்கள் வீட்டுப் பெண். உங்கள் ஊரை சேர்ந்தவர். எந்நேரமும் என்னை அழைக்கலாம். உங்கள் கோரிக்கைகள், குறைகளை நிவர்த்தி செய்வேன்,'' என்றார்.

பிரசாரத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து பெண்கள் கேள்வி எழுப்பினர். விரைவில் நிறைவேற்றுவதாக வேட்பாளர் உறுதியளித்தார். தி.மு.க., நகர செயலாளர் பரமேஸ்வரன், மன்னீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us