ADDED : ஜூலை 02, 2026 04:15 AM
அன்னூர்: ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1ம் தேதி வருவாய் துறை தினமாக வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருவாய்த்துறை தின விழா, அன்னூர் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தில்குமார் வருவாய் துறை அலுவலர் சங்க கொடி ஏற்றி வைத்து பேசுகையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் தடையில்லாமல் அனைத்து சேவைகளும் கிடைக்க இந்த நாளில் உறுதி ஏற்கிறோம், என்றார்.
சங்க மாவட்ட செயலாளர் கமலஹாசன், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதி பிரகாஷ், தமிழ்நாடு நில அளவை ஒன்றிணைப்பு சங்க நிர்வாகி வைகை அரசன், கிராம உதவியாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும், இனிப்புகள் வழங்கப்பட்டு, வருவாய் துறை தினம் கொண்டாடப்பட்டது.
