ADDED : ஜூலை 02, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: கோவை லயன்ஸ் கிளப் மெரிட் சங்கத்தின் சார்பில், மேட்டுப்பாளையத்தில் மருத்துவர் தின விழா நடந்தது.
விழாவுக்கு சங்கத் தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். டாக்டர் பிரேம் ஆனந்தை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். பின்பு அன்னூர் சாலையில் உள்ள விஸ்வநாதன் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு, உணவு வழங்கினர். இந்த விழாவில் மண்டல தலைவர் விஜயகுமார், வட்டாரத் தலைவர் செல்வராஜ், மணிகண்டன், முத்துவேல் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
