/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சிகளில் வளர்ச்சி பணி பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
/
ஊராட்சிகளில் வளர்ச்சி பணி பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
ஊராட்சிகளில் வளர்ச்சி பணி பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
ஊராட்சிகளில் வளர்ச்சி பணி பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு
ADDED : நவ 20, 2024 10:17 PM
கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பள்ளிக்கட்டடம் திறப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் துவக்க விழா நடந்தது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இதில், சிறு பாலம், குழாய் பதிப்பு பணிகள், பள்ளி கட்டடம் உள்ளிட்ட பணிகளை, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
கோதவாடி ஊராட்சியில், கனிமம் மற்றும் சுரங்க நிதியில், கான்கிரீட் சாலை மற்றும் சிறுபாலம் அமைக்கவும், சாலை மேம்படுத்தவும், 13.9 லட்சம் ரூபாய் மற்றும் 15வது நிதிக்குழு மானியத்தில் இருந்து வடிகால் உடன் கூடிய சிறுபாலம் அமைதல் மற்றும் குழாய் அமைக்க, 3.95 லட்சம் ரூபாய் என மொத்தம் 17.85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை துவக்கி வைத்த எம்.பி., கோதவாடி குளத்தை பார்வையிட்டார். குளத்திற்கு விரைவில் தண்ணீர் கொண்டு வரப்படும் என உறுதியளித்தார்.
பனப்பட்டி ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் வாயிலாக, 12.76 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் மற்றும் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம் வாயிலாக, 32.8 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடதை எம்.பி., திறந்து வைத்தார்.
இதே போன்று, அரசம்பாளையம் ஊராட்சியில், குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம் வாயிலாக, 32.8 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடம் திறக்கப்பட்டது.