குப்பை, ரோடு பிரச்னைக்காக மா. கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
குப்பை, ரோடு பிரச்னைக்காக மா. கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
UPDATED : நவ 17, 2026 06:48 PM
ADDED : நவ 17, 2026 06:48 PM

அ நிறம் | அளவு
கோவை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்தந்த மண்டலத்துக்குட்பட்ட சுகாதாரம், ரோடு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
குப்பை, ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்; வார்டு மேம்பாட்டு நிதியை கவுன்சிலர்கள் சுதந்திரமாக செலவிட அனுமதிக்க வேண்டும்; மழை முன்னெச்சரிக்கை, நிவாரண பணிக்கு தனி நிதி ஒதுக்க வேண்டும்; மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
