/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
40 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
/
40 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
ADDED : செப் 29, 2024 01:39 AM
கோவை: கோவை மாநகராட்சி, 80வது வார்டு ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'வருமுன் காப்போம்' மருத்துவ முகாம் நேற்று நடந்தது. மாகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், முகாமை துவக்கி வைத்தார். துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார்.
நீரழிவு, ரத்த அழுத்தம், எலும்பு மூட்டு சிகிச்சை, கர்ப்பிணிகள் மற்றும் மகளிர் நலம், பல், கண், கர்ப்பபை புற்றுநோய் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை, தோல் மருத்துவம், இ.சி.ஜி., ஸ்கேன், ரத்தம், சளி, சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது.
மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன் சார்பில், 40 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழச்சி நடத்தப்பட்டது.
சீதனமாக புடவை, ஜாக்கெட், வளையல், பழ வகைகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில், ஊட்டச்சத்து பெட்டகம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு, கமிஷனர் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
நகர் நல அலுவலர் (பொ) பூபதி, மண்டல மருத்துவ அலுவலர் தினேஷ் பெரியசாமி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.