தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சமுதாய வளைகாப்பு விழா

 சமுதாய வளைகாப்பு விழா

 சமுதாய வளைகாப்பு விழா


ADDED : பிப் 28, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், காரமடை வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா, மேட்டுப்பாளையம் தமிழ் சங்க அறக்கட்டளை மண்டபத்தில் நடத்தப்பட்டது.

காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து, 120 கர்ப்பிணிகள் பங்கேற்றனர். மேற்பார்வையாளர் அங்கையர்கன்னி வரவேற்றார். காரமடை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். கர்ப்பிணிகளுக்கு, சண்முகசுந்தரம், விஜயலட்சுமி, டாக்டர் சவுமியா வதனா ஆகியோர் சீர் வரிசைகள் வழங்கி வளைகாப்பு செய்தனர்.

டாக்டர் சவுமியா வதனா பேசுகையில், ''கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொரு மாதமும் எடை அதிகரிப்பதை, உங்களுக்கு வழங்கிய அட்டையில் குறிக்க வேண்டும். உணவில் கீரை வகைகளை அதிகம் சேர்க்க வேண்டும். பழங்கள் சாப்பிட வேண்டும். தாய்ப்பால், ஆறு மாதங்களுக்கு அவசியம் கொடுக்க வேண்டும்,'' என்றார்.

மனோகரன், மேற்பார்வையாளர் பிரேமா ஜெயமதி உட்பட அங்கன்வாடி பணியாளர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். மேற்பார்வையாளர் வெண்ணிலா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us