காலாவதியான மூலிகை பொடி விற்றதால் இழப்பீடு தர உத்தரவு
காலாவதியான மூலிகை பொடி விற்றதால் இழப்பீடு தர உத்தரவு
UPDATED : நவ 19, 2026 04:12 PM
ADDED : நவ 19, 2026 04:10 PM
கோவை: கவுண்டம்பாளையம், கே.கே.புதுார் ரோட்டை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். வடவள்ளி, நவாவூர் பிரிவிலுள்ள ஆப்பிள் சூப்பர் மார்க்கெட்டில், 2026 மே 8ல் மளிகை பொருட்கள் வாங்கினார்.
‘கீயா ஓரிகானோ’ என்ற பெயரில், மூலிகை பொடி பாக்கெட் வாங்கியிருந்தார். அதன் விலை 10 ரூபாய். வீட்டிற்கு வந்த போது பொருட்களை சரிபார்த்தார். மூலிகை பொடி பாக்கெட் காலாவதி தேதி முடிந்து ஒரு மாதத்திற்கு பிறகும் மூலிகை பொடியை விற்றது தெரியவந்தது.
சூப்பர் மார்க்கெட் சென்று கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை. வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்க தவறினர். இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சண்முகசுந்தரம் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
காலாவதியான உணவு பொருளை விற்பனை செய்வது வாடிக்கையாளர் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால், எதிர்மனுதாரர் நேர்மையற்ற வணிகம் மற்றும் சேவை குறைபாடு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மூலிகை பொடிக்கு பெற்ற தொகை, 10 ரூபாய் திருப்பி செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், வழக்கு செலவு 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
