தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோழி இறகு சுத்தப்படுத்தும் மெஷின் பழுதானதால்  இழப்பீடு தர உத்தரவு 

கோழி இறகு சுத்தப்படுத்தும் மெஷின் பழுதானதால்  இழப்பீடு தர உத்தரவு 

கோழி இறகு சுத்தப்படுத்தும் மெஷின் பழுதானதால்  இழப்பீடு தர உத்தரவு 


ADDED : செப் 25, 2026 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார்.  பீளமேட்டிலுள்ள கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தில், 2025, அக்., 25 ல், கோழி இறகு சுத்தம் செய்யும் மெஷினை 11,500 ரூபாய்க்கு வாங்கினார்.

எந்திரத்தை வாங்கி பயன்படுத்திய போது, கோழி இறகை சரியாக அகற்ற முடியவில்லை. கோழியின் தோலை கிழித்தது. சீரான வேகத்தில் சுழலாமல், அதிக சத்தம் எழுப்பியது. உற்பத்தியில் குறைபாடு இருந்தது தெரிந்தது. 

பழுது குறித்து தெரிவித்தபோது அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால், மெஷினை மாற்றி தரவோ, பழுது நீக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பழுதை சரி செய்ய,  ஜெயச்சந்திரன் சொந்த செலவில் உதிரி பாகம் வாங்கி தருமாறு நிறுவனத்தினர் கூறினர். இதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

பழுது நீக்கி தராததால், வியாபாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மெஷினை பெற்றுக்கொண்டு, பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது மறுத்தனர்.  இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரரிடம் பெற்ற தொகை, 11,500 ரூபாயை எதிர்மனுதாரர் நிறுவனம் திருப்பிகொடுப்பதோடு, பழுதான மெஷினை திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 7,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us