/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளம் தொழில்முனைவோர் கண்டுபிடிப்புகளுக்கு போட்டி
/
இளம் தொழில்முனைவோர் கண்டுபிடிப்புகளுக்கு போட்டி
ADDED : நவ 24, 2024 11:09 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில், இன்ஸ்டிடியூட் அப் இன்னவேஷன் கவுன்சில் சார்பில், மாணவர்கள் இடையே இளம் தொழில் முனைவோருக்கான புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்த போட்டி நடந்தது.
கல்லுாரி இயக்குனர் (பொறுப்பு) சர்மிளா தலைமை வகித்தார். இதில், மாணவ, மாணவியர் ஒன்றிணைந்து, குழுவிற்கு 4 பேர் வீதம் கலந்து கொண்டனர். அவ்வகையில், 20 குழுவினர் களம் இறங்கினர். பட விளக்கக் காட்சி வாயிலாக புதுமையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைக் காட்சிப்படுத்தினர். முறையே முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர்கள் பாலாஜி விக்னேஷ், இணைப் பேராசிரியர் கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.