/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவு சார் மையத்தில் போட்டித்தேர்வு பயிற்சி
/
அறிவு சார் மையத்தில் போட்டித்தேர்வு பயிற்சி
ADDED : ஜன 09, 2026 05:18 AM
கோவை: உப்பிலிபாளையம் ஆடீஸ் வீதியில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் உள்ளது. போட்டித்தேர்வர்கள் பயன்படுத்த 2,080 புத்தகங்கள் இருக்கின்றன. இரு ஆண்டுகளில் ஒரு லட்சம் மாணவர்கள் வந்து, போட்டித் தேர்வுக்கு தயாராகினர்.
இம்மையத்தில் அளித்த பயிற்சியால், குரூப் 2 தேர்வில் 6, குரூப் 4 தேர்வில் 12, ஐ.ஐ.டி. தேர்வில் 2, வங்கித் தேர்வில் 1, என்.இ.டி. தேர்வில் 1 மாணவர் தேர்ச்சி பெற்றனர்.
இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் தொழில்முனைவோர், மனித வளம், கிராபிக் டிசைன், வீடியோ எடிட்டிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு தலைப்பில் திறன் மேம்பாட்டு பயற்சி அளிக்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பும் நடத்தப்படுகிறது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

