ADDED : டிச 18, 2024 10:56 PM
அ நிறம் | அளவு
போத்தனூர்; கோவைபுதூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்படுகிறது. இங்கு கோவை மலர் எனும் மகளிர் சுய உதவி குழு தலைவரான கோகுலம் காலனி, கே.எம்.ஆர்., நகரை சேர்ந்த லிஸி என்பவர், தனது குழு உறுப்பினர்களுக்கு, ரூ.15 லட்சம் கடன் பெற்றார்.
இதற்கான மாத தவணையை, உறுப்பினர்களிடமிருந்து வசூலித்து, வங்கியில் செலுத்த வேண்டியது லிஸியின் பொறுப்பாகும். அதுபோல் இவர், தான் வசூலித்த தொகையை, வங்கியில் முறையாக செலுத்தவில்லை. சுமார், 12.4 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார். வங்கி மேலாளர் நரேந்திரகுமார் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
