ADDED : அக் 30, 2024 11:44 PM
அ நிறம் | அளவு
அன்னுார் ; கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் மீது அவதூறு பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்ய புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்தவர் குமார ரவிக்குமார். இவர் கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர்.
இவர் மீது இரண்டு பேர் சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டுள்ளனர்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு இளைஞர் பேரவை சார்பில், நேற்று அதன் உயர்மட்ட குழுத் தலைவர் பழனிச்சாமி தலைமையில், அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.
