/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விண்ணப்பிக்காதவருக்கு படிவம்; பா.ஜ., கட்சி தேர்தலில் புகார்
/
விண்ணப்பிக்காதவருக்கு படிவம்; பா.ஜ., கட்சி தேர்தலில் புகார்
விண்ணப்பிக்காதவருக்கு படிவம்; பா.ஜ., கட்சி தேர்தலில் புகார்
விண்ணப்பிக்காதவருக்கு படிவம்; பா.ஜ., கட்சி தேர்தலில் புகார்
ADDED : ஜன 24, 2025 11:01 PM
அன்னுார்; மாவட்டத் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்காதவருக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.
தமிழக பா.ஜ.,வில் கட்சி ரீதியாக 67 மாவட்டங்கள் உள்ளன. கோவை வடக்கு மாவட்டத்தில், மேட்டுப்பாளையம், அவிநாசி, சூலூர் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த மூன்று தொகுதிகளில் 11 ஒன்றியங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்று ஒன்றிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக, கோவை வடக்கு மாவட்ட தலைவர் தேர்தல் மாலையில் துவங்கியது. தேசிய பொதுக்குழு உறுப்பினர் கார்வேந்தன் தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார்.
மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிட மாரிமுத்து, கோபால்சாமி, விக்னேஷ் ஆகிய மூவருக்கு மட்டும் அவர் படிவம் வழங்கி உள்ளார்.இதனால் பா.ஜ., நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்து வாக்கு வாதம் செய்தனர்.
இது குறித்து கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., பொதுச் செயலாளர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'மாவட்ட தலைவர் தேர்தலில் போட்டியிட, இரு வாரங்களுக்கு முன் 10 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் இன்று (நேற்று) மூன்று பேருக்கு மட்டும் படிவம் வழங்கப்பட்டது.
மாவட்டத் தலைவர் தேர்தலில்  விண்ணப்பிக்காத மாரிமுத்துவுக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. மாரிமுத்து, ஒன்றியங்களில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கட்சி தேர்தல் அதிகாரி, கட்சி பொறுப்புக்கு போட்டியிடக் கூடாது என்பது விதி. ஆனால் விதியை மீறி, மாவட்ட தலைவர்  பதவிக்கு படிவம் வழங்கி உள்ளனர். தலைமை இந்த குளறுபடியை சரி செய்ய வேண்டும். நியாயமான முறையில் கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்,' என்றனர்.

