/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல கோடி ரூபாய் மதிப்புள்ளகோவில் நிலம் ஆக்கிரமிப்பு புகார்
/
பல கோடி ரூபாய் மதிப்புள்ளகோவில் நிலம் ஆக்கிரமிப்பு புகார்
பல கோடி ரூபாய் மதிப்புள்ளகோவில் நிலம் ஆக்கிரமிப்பு புகார்
பல கோடி ரூபாய் மதிப்புள்ளகோவில் நிலம் ஆக்கிரமிப்பு புகார்
ADDED : ஏப் 18, 2025 11:30 PM
அன்னுார்: காட்டம்பட்டி ஊராட்சி, வரதையம்பாளையத்தில், 150 ஆண்டுகள் பழமையான, கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது. நேற்று சிலர் கோவில் நிலத்திலும், அதை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலத்திலும் உள்ள மரங்களை வெட்டி வாகனங்களில் கடத்த முயன்றனர். இது குறித்து கிராம மக்கள் வருவாய் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் வந்து மரங்கள் ஏற்றப்பட்ட ஒரு லாரியை பிடித்தனர். மற்றொரு லாரி தப்பி சென்று விட்டது. பிடிபட்ட லாரியை அன்னுார் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து அக்கோவில் அறங்காவலர் ஈஸ்வரன் மற்றும் பக்தர்கள் கூறுகையில், இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. கோவிலில் நித்திய பூஜை கூட செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை, கோவில் நிலத்தை அளந்து, கல் நட்டு, கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதுகுறித்து இரண்டு ஆண்டுகளாக முதலமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு பல மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை,' என்றனர்.
மரம் வெட்டப்பட்ட இடத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.