/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் புகார்
/
மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் புகார்
ADDED : அக் 03, 2024 11:58 PM
வால்பாறை : துறை ரீதியாக கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட கலெக்டரை சந்தித்து, வணிகர் சம்மேளனம் புகார் தெரிவித்துள்ளது.
தமிழக வணிகர் சம்மேளனத்தின் மாநில துணை செயலாளர் பரமசிவம், மாநில செயற்குழு தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் கவியரசன் மற்றும் நிர்வாகிகள், கோவை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின் துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளில், மக்களின் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். இது தொடர்பாக பல முறை நேரடியாகவும், தபால் வாயிலாகவும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னையை பேசி தீர்வு காணும் வகையில், துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய கூட்டம், மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்த வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

