/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோழிப்பண்ணையால் சுகாதாரம் பாதிப்பு: குறைதீர் நாள் கூட்டத்தில் புகார்
/
கோழிப்பண்ணையால் சுகாதாரம் பாதிப்பு: குறைதீர் நாள் கூட்டத்தில் புகார்
கோழிப்பண்ணையால் சுகாதாரம் பாதிப்பு: குறைதீர் நாள் கூட்டத்தில் புகார்
கோழிப்பண்ணையால் சுகாதாரம் பாதிப்பு: குறைதீர் நாள் கூட்டத்தில் புகார்
ADDED : நவ 18, 2025 03:51 AM

பொள்ளாச்சி: 'கோழிப்பண்ணையால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறைதீர் கூட்டத்தில் மக்கள் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.பா.ஜ. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி அருகே, வீரல்பட்டி கிராமத்தில் கோழிப்பண்ணை செயல்படுகிறது. முறையாக பராமரிப்பு இல்லை.இங்கு கோழிகளின் எச்சங்கள் முறையாக அப்புறப்படுத்துவதில்லை. பண்ணையின் கீழ் கோழி எச்சங்களுடன் சேர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த இடத்தில் கொசுக்கள், விஷபூச்சிகள், ஈக்கள் உற்பத்தியாகி சுகாதாரம் பாதிக்கிறது.
கோழிப்பண்ணையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், சுவாச பிரச்னை ஏற்படுகிறது. கோழிப்பண்ணைக்கு முறையான அனுமதி அரசு துறையிடம் இருந்து பெறவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு டவுன் பஸ், '47 ஏ' தினமும் காலை, 7:30 மணிக்கு வீரல்பட்டி வரும் வகையிலும், அதன்பின், எரிசனம்பட்டி சென்று திரும்பி சமத்துார் வழியாக பொள்ளாச்சி செல்லும் போது வீரல்பட்டி வழியாக இயக்க வேண்டும். அதேபோன்று, '47 ஏ' பஸ் தினமும் மாலை, 5:00 மணிக்கு வீரல்பட்டி வரும்படியும், திரும்பி செல்லும் போது எரிசனம்பட்டியில் இருந்து வீரல்பட்டி வழியாக செல்ல வேண்டும்.
வீரல்பட்டிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்ட டவுன் பஸ், '7 பி/ 47 ஏ' பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். அரசு பஸ் வழித்தட எண் - 56, பொள்ளாச்சியில் இருந்து தேவனுார்புதுார் செல்லும் அரசு பஸ்கள், அனைத்தும் வீரல்பட்டி வழியாக இயக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கை எடுத்து பஸ் இயக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ. ஒன்றிய தலைவர் கவுதம் லிங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி அருகே, கள்ளிப்பட்டியில் இருந்து மூலனுார் மற்றும் கருமாபுரம் வரை செல்லும் முக்கிய ரோடுகள், 10 ஆண்டுகளுக்கு முன் தார் ரோடாக அமைக்கப்பட்டது. அதன் பின், எவ்வித பராமரிப்பும் செய்யபடாததால் தற்போது இந்த ரோடு மிகவும் சேதமடைந்து பயணிக்க முடியாத நிலையில் உள்ளது.
இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, ரோட்டை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

