/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரச மர கிளைகளை அதிகமாக வெட்டியதாக புகார்
/
அரச மர கிளைகளை அதிகமாக வெட்டியதாக புகார்
ADDED : செப் 30, 2024 11:27 PM

மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையத்தில், வருவாய் துறை அறிவுறுத்தலை மீறி, அரச மரத்தின் கிளைகளை அதிகமாக வெட்டியதாக, வருவாய் ஆய்வாளர் மேட்டுப் பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், மேட்டுப்பாளையம் போலீஸ்ஸ்டேஷன் அருகே மேதர் பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரச மரம் ஒன்று உள்ளது.
இதன் கிளைகள் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டடத்தின் மீது படும்படி அடர்ந்து வளர்ந்தது. இதையடுத்து, அந்த தனியார் நிறுவனத்தினர், அரச மரத்தின் கிளைகளை வெட்டினர்.
மேட்டுப்பாளையம் தாலுகா வருவாய் ஆய்வாளர் கற்பகவல்லி, கட்டடத்தின் மேல் பகுதியில் உள்ள அரச மரத்தின் கிளைகளை அதிகமாக அகற்றக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.
ஆனால் அதைக் கேட்காமல், தனியார் நிறுவனத்தினர், அரச மரத்தின் கிளைகளை அதிகமாக வெட்டி அகற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, வருவாய் ஆய்வாளர் கற்பகவல்லி,மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.