/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மும்முனை மின்சாரமின்றி பயிர்கள் காய்வதாக புகார்
/
மும்முனை மின்சாரமின்றி பயிர்கள் காய்வதாக புகார்
ADDED : ஆக 05, 2025 11:18 PM
அன்னுார்; மும்முனை மின்சாரம் இல்லாததால், தோட்டங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்கின்றன என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அன்னுார் அருகே பசூர் துணை மின் நிலையத்தை சேர்ந்தது பொங்கலுார் மற்றும் ஆலத்துார் கிராமங்கள். இத்துடன் சேவூர் துணை மின் நிலையத்தைச் சேர்ந்த தத்தனுார், புலிப்பார், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், முனியாண்டம் பாளையம் ஆகிய கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இங்கு இருமுனை மின்சாரம் மட்டுமே உள்ளதால், பயிர்களுக்கு முழுமையாக தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை. மேலும் இங்கு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் துவங்குவதற்கு இங்கு முன் வருவதில்லை.
இதனால் வேலை கிடைக்காமல், இப்பகுதி தொழிலாளர்கள் திருப்பூர் மற்றும் கோவைக்கு செல்ல வேண்டி உள்ளது.
இதுகுறித்து இப் பகுதி மக்கள் மின்துறை அமைச்சர் மற்றும் மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பிய மனுவில்,'பசூர் துணை மின் நிலையம் மற்றும் சேவூர் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
இதனால் விவசாயிகளும் தொழில் முனைவோரும் பயன்பெறுவார்கள்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.