/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குட்டையூரில் சர்வீஸ் பஸ்கள் நிற்பதில்லை என புகார்
/
குட்டையூரில் சர்வீஸ் பஸ்கள் நிற்பதில்லை என புகார்
ADDED : ஏப் 21, 2025 08:57 PM
மேட்டுப்பாளையம், ; மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் குட்டையூர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. குட்டையூர் மற்றும் காந்திநகரில் இருந்து அலுவலகப் பணி, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், கூலி வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் தினமும் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இப்பகுதிகளில் டவுன் பஸ்கள் மட்டுமே நிற்கின்றன. சர்வீஸ் பஸ்கள் நிற்பது கிடையாது.
இதனால் கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், துடியலூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்ல டவுன் பஸ் வாயிலாக காரமடை அல்லது மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டுகளுக்கு சென்று, பின் அங்கிருந்து வேறு பஸ்கள் வாயிலாக தான் செல்ல முடியும். இதனால் இப்பகுதிகளில் அரசு மற்றும் தனியார் சர்வீஸ் பஸ்களை நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் பேரில் இப்பகுதிகளில் சர்வீஸ்பஸ்களை நிறுத்த அவர் உத்தரவிட்டார். ஆனாலும் பல அரசு மற்றும் தனியார் சர்வீஸ் பஸ்கள் இப்பகுதிகளில் நிறுத்துவதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.