ADDED : அக் 02, 2025 12:24 AM
அன்னுார்; அன்னுார் அருகே பி.கரியாம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளரும், டாக்பியா சங்க மாவட்ட தலைவருமான சண்முகசுந்தரம் ஓய்வு பெற்றார்.
இதையொட்டி பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பாராட்டு விழா பிள்ளைப்பம்பாளையத்தில் நடந்தது. சங்கத்தின் முன்னாள் தலைவர் சாய் செந்தில் தலைமை வகித்தார். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள 4,500க்கும் மேற்பட்ட சங்கங்களில் முதல் 25 இடங்களுக்குள் கரியாம்பாளையம் சங்கம் இடம் பெற்றுள்ளது, என்றார்.
ஓய்வு பெறும் சண்முக சுந்தரத்தை பாராட்டி பலர் கவுரவித்தனர். கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர்கள் தினேஷ் குமார், ஐயப்பன், வடிவேல், டாக்பியா சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.