/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலப்பு உரம் விற்பனை 3 மாதங்களில் ரூ.2.41 கோடி
/
கலப்பு உரம் விற்பனை 3 மாதங்களில் ரூ.2.41 கோடி
ADDED : டிச 13, 2025 05:04 AM
கோவை: துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் செயல்படும் உரப்பிரிவு வாயிலாக, கலப்பு உரம், வேப்பம் புண்ணாக்கு பவுடர், நுண்ணுாட்டச்சத்து ஆகியவை
தயாரிக்கப்பட்டு, தேவைக்கேற்ப, தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தரமாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் இக்கலப்பு உரங்களுக்கு விவசாயிகளிடம் பெரிதும் வரவேற்பு உள்ளது.
கடந்த செப்., -அக். ,-நவ., மாதங்களில், கலப்பு உரம் 556 டன், 523 டன், 562 டன், வேப்பம்புண்ணாக்கு பவுடர் 82.85 டன், 93 டன், 95 டன் தயாரிக்கப்பட்டுள்ளன. நுண்ணுாட்டச்சத்து அக்., மற்றும் நவ., மாதங்களில் 2 டன் மற்றும் 8 டன் தயாரிக்கப்பட்டுள்ளன.
மூன்று மாதங்களில் கலப்பு உரம் 2.41 கோடி ரூபாய்க்கும், வேப்பம் புண்ணாக்கு பவுடர் 1.42 கோடி ரூபாய்க்கும், நுண்ணுாட்டச்சத்து 4.69 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

