/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறன் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
/
மாற்றுத்திறன் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
மாற்றுத்திறன் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
மாற்றுத்திறன் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
ADDED : டிச 13, 2025 05:04 AM
கோவை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, அனைத்து பள்ளிகளிலும் 'ஸ்கிரைப்' மூலம் பயிற்சி அளிக்க, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில், 3,500 மாற்றுத்திறன் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களை தயார்படுத்தும் விதமாக, காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளில், சொல்வதை எழுதுபவர் (ஸ்கிரைப்) முறையில், ஆசிரியர்களை கொண்டு அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நடைமுறையினால், மாணவர்கள் பொதுத்தேர்வை பயமின்றி எதிர்கொள்வதோடு, கற்றல் அடைவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒருசில பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி மாணவர்களைக் கொண்டு, இத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இருப்பினும், பல பள்ளிகளில் இம்முறை பின்பற்றப்படுவதில்லை. சில பள்ளிகளில் வினாத்தாள்களை பெற்றோர்களுக்கு அனுப்பி, வீட்டில் பயிற்சி அளிக்க அறிவுறுத்துகின்றனர்.
குறிப்பாக, அறிவுசார் குறைபாடுடைய மாணவர்களுக்கு, இது போன்ற பயிற்சி போதுமான அளவில் வழங்கப்படுவதில்லை.
மாவட்ட கல்வி அதிகாரி கோமதி கூறுகையில், ''தாங்கள் படிக்காவிட்டாலும் 'ஸ்கிரைப்' நமக்காக தேர்வு எழுதி தேர்ச்சி பெற வைத்து விடுவார்கள் என்ற தவறான எண்ணத்தை, மாற்றுத்திறன் மாணவர்களிடம் ஏற்படுத்தி விடக்கூடாது. இந்த மனநிலையை மாற்ற, தேர்வுகள் அவசியம்.
பள்ளிகளில் ஆய்வின் போது, ஆசிரியர்களை ஸ்கிரைபாக நியமிக்க இயலாவிட்டாலும், அப்பள்ளியில் நன்கு படிக்கும் பிற வகுப்பு மாணவர்களைக் கொண்டு, மாற்றுத்திறன் மாணவர்களை தேர்வு எழுத வைக்குமாறு, அறிவுறுத்தி வருகிறோம், என்றார்.

